ஆரம்பக் கல்வியின் அபிவிருத்தி

திருமதி.சாந்தநாயகி ஜெயபாலன்

ஆரம்பக் கல்வியே உயர்கல்விக்கும் உவப்பான வாழ்க்கைக்கும் எம்மை உயர்த்தும் ஏணி என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக எமது பாடசாலையானது ஆரம்பக் கல்வித்துறையில் முன்னேற்றப் பாதையில் செல்கின்றது என்பதை என்னால் கூறமுடியும். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்“ எனபதற்கிணங்க ஆரம்பக் கல்வி அமைதல் வேண்டும். நான்  இப் பாடசாலையில் ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பாசிரியர் என்ற வகையில் கூற விரும்புவது யாதெனில் குழந்தைகளின் சூழல் நிலைமைகள், உடல் வளர்ச்சி,உள வளர்ச்சி, மனப்பாங்கு வளர்ச்சி என்பன ஆரம்பக்கல்வியில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியனவாகும்.

இதற்கிணங்க எமது பாடசாலையில் பல்வேறு  சூழலில் இருந்து வரும் மாணவர்களை எழுதவும் வாசிக்கவும் பல்வேறு விதமான கற்பித்தல் அணுகுமுறைகளைக் கையாண்டு எமது ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் அயராத முயற்சியை மேற்கொண்டு மேல் வகுப்புகளிற்குச் செல்லும் மாணவர்களின்  எழுத வாசிக்கும் இடர்களைத் தீர்க்கின்றனர்.

எமது பாடசாலையைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் ஆதரவு பெருமளவு இல்லையென்றே கூறவேண்டும்.. இந் நிலையிலும் எமது மாணவர்களையும் தம்மால் இயன்றவரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு ஆசிரியர்கள் அயராது உழைக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை.  இதற்கமைய எமது பாடசாலை மாணவர்கள் தரம் ஐந்தின் பிற்பாடு உயர் பாடசாலைகளை நோக்கி தமது கல்வி நிலையை மேலும் மேம்படுத்துகின்றார்கள். இதை நோக்கும் போது அன்றைய நிலையில் பாடசாலைக் கட்டடங்கள் வசதியீனமாகக் காணப்படட்ட போதும் தற்போது எமது அதிபர் திரு.க சண்முகராசா அவர்களின் முயற்சியினால் கட்டடங்கள் மூடி அமைக்கப்பட்டும் ஏனைய அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டும்  சிறந்த முறையில் செயற்பட்டு வருவதை பெருமிதத்துடன் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

தற்போது சிறுவர்கள் கணனியைக் கையாள்வதற்கு கணனித் துறை ஆசிரியர் திரு.தி.சுபாகரன் அவர்களின் முயற்சியினால் கணனி அறையும் கணனி வசதிகளும் கிடைத்தமை எமது அரம்பக் கல்விக்கு ஊறுதுணையாக அமைந்துள்ளன.