யா/புலோலி மெ.மி.த.க.பாடசாலை
அதிபரின் செய்தி
சிறிய பாடசாலையாக ஆரம்பித்த எமது யா/புலோலி மெ.மி.த.க. பாடசாலை இன்று தரம்-II பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டு கல்வி அபிவிருத்தியிலும் ஏனைய இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் மேம்பட்டு நிற்கின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இப் பாடசாலைக்கு அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன்.இன்றைய நவீன உலகின் போக்கோடு எமது சிறார்களையும் இணைத்து எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டே எமது முகாமைத்துவச் செயற்பாடுகள் நகர்ததப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் 2009 ம் ஆண்டிலிருந்து எமது பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழினுடபம் தரம் 10 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பயனாக இன்று எமது பாடசாலையும் இணையத்தள வாயிலாக உலகுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புக்கிடைத்தமை எமக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மூலம் எமது பாடசாலைத்தேவைகளை உலகறியச் செய்து அதனூடாக அவற்றை நிறைவு செய்து கொள்ளவும் எமது முன்னேற்றம் பற்றி எடுத்துக் கூறவும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.எனவே எமது பாடசாலையின் இணையத்தளத்ததைத் தரிசித்து எமது தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன் எமது பாடசாலையின் அபிவிருத்திப் போக்கினை அவதானித்து ஆக்கபூர்வமான கருத்துக்களையும் வழங்கியுதவுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் இவ் இணையத்தளத்தினை உருவாக்கித்தந்த தகவல் தொடர்பாடல் மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய திரு.தி.சுபாகரன், திருமதி.செல்வரஞ்சனி குபேந்திரன் ஆகிய எமது ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
Last Updated (Sunday, 14 November 2010 22:22)
எங்கள் பிரதேசம்
எங்கள் கல்வித் தாயின்
|
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி
Last Updated (Sunday, 07 November 2010 17:27) |







யா/புலோலி மெ.மி.த.க. பாடசாலைக்கு 2009 ம் ஆண்டில் நான் இடமாற்றம் பெற்று வந்த பொழுது இப்பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடம் கற்பிக்கப்படாதிருந்தது.பாடசாலையில் ஒரேயொரு கணனி மாத்திரமே காணப்பட்டது. அவ்வாறான நிலையிலும் அந்த ஆண்டில் இப்பாடத்தைக் கற்பதற்கு மூன்று மாணவர்களைத தெரிவு செய்து தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்தை ஆரம்பித்தோம். இன்று அந்த மாணவர்கள் தரம் 11 இல் கல்வி பயின்றுகொண்டிருக்கின்றார்கள். தற்போதைய தரம் 10 மாணவர்களும் இப்பாட நெறியைக் கற்று வருகின்றார்கள். இவர்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மென்பொருள் ஆக்கப் போட்டியிலும் பங்குபற்றியிருக்கின்றார்கள். ஏனைய ஆசிரியர்கள் பலரும் இத் துறையில் ஆர்வம் கொண்டு தற்பொழுது பயின்று வருகின்றார்கள்.2009 ஆசிரியர்களுக்கான மென்பொருள் ஆக்கப் போடடியில் ஆரம்பக் கல்விப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை இப்பாடசாலையின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப துரித மேம்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. இன்று எமது தகவல் தொடர்பாடல் தொழினுட்ப மாணவர்கள் மொறட்டுவ பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் இணையத்தள வடிவமைப்புப் போட்டியை அடிப்படைாகக் கொண்டு இவ் இணையத் தளத்தை வடிவமைத்துள்ளனர். இவர்களது கன்னி முயற்சியைப் பாராட்டி வாழ்த்துவதுடன் இவர்கள் இப்போடடியில் வெற்றி பெறவேண்டும் எனவும் இதயம் திறந்து வாழ்த்துகின்றேன்.